Tuesday, June 29, 2010

க(WE)தை

உங்களையெல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது
நான் கவிதை படித்து நீங்கள் கேட்க இருப்பதால் !
பரவாயில்லை என்கிறிர்கள் ! சந்தோஷமாக இருக்கிறது
ஆனாலும் மெலிதாக கேட்கிறது உங்கள் முணுமுணுப்பு
வேறுவழி இல்லை என்று.
ரகசியமாய் கேட்டான் என் நண்பன்
நமக்குத்தான் அனஸ்தீஸியா, ஆங்கிலம் , தமிழ் என்று
அனைத்திலும் தகராறு
கவிதை மட்டும் எப்படி ?
விடாமுயற்சி ; நீண்ட சிந்தனை ;
வந்தது வார்த்தைகள் - உரைநடையாக !
உடனே வார்த்தைகளை எழுதினேன் ஒன்றின்கிழ்ஒன்றாக
இப்போது உரைநடை தெரிந்தது கவிதைநடையாக
இது நான் எழுதிய கதை கவிதையாக மாறிய கதை
இனி இக்கவிதை பேசும் நம் கதை

நம் கதை கவிதையாகும் - எப்போது ?
நாம் ஒன்று கூடினால் நம் கதை கவிதையாகும் - எப்படி ?
"கதை நடுவில் WE சேர்ந்தால்
கதை க(WE)தை ஆவதுப்போல "
"கதை நடுவில் WE சேர்ந்தால்
கதை க(WE)தை ஆவதுப்போல "
நான் ஒருமுறை சொல்லும்போதே

உடனே புரிந்துக்கொண்டு கை தட்டுங்கள் - இல்லை எனில்
இது போன்ற கருத்தாழமிக்க கவிதை வரிகளை
கவிதை சொல்லும் மரபின்படி
நான் இருமுறை சொல்லி நீங்கள் கேட்கவேண்டி இருக்கும் !

எனக்குள் ஒரு கேள்வி ;ஒரு ஆச்சர்யம்
நீண்ட நாளாய்!.
நாம் மயக்க நிபுணர்கள்
மயக்கமருந்துகளால் மட்டும் அல்ல
நல்ல கவிதை நயத்தாலும் -மயக்கும் நிபுணர்கள்
(பின்குறிப்பு - நாம் என்றால் நான் மற்றும்
கவிதை எழுதத்தெரிந்த பிற மயக்க நிபுணர்கள்)

என் ஆச்சர்யமான கேள்வி;
நாங்கள் கவிஞர்களாக இருப்பதினால் மயக்க நிபுணர்கள் ஆனோமா!
அல்லது மயக்க நிபுணர்களாக இருப்பதினால் கவிஞர்களாக ஆனோமா!

தெரிந்தது மிகக் குறைவு என்பதை புரிந்துகொள்ளவே
நிறைய தெரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது
சைக்கில் ஓட்ட கற்க வேண்டுமானால்

கீழே விழுந்தால்தான் கற்க முடியும்
ஆனால் அதை விமான ஒட்டியும் நாமும் பின்பற்ற முடியாது
தெரிந்து கொள்வோம் புதிய ஆருடம்
இருபத்திநாளு மணி நேரமும் நல்ல நேரம்
ஒன்றும் கற்காமல் இருக்கும் நேரம் கெட்ட நேரம் என்று
நிமிடத்திற்கு நிமிடம் கற்போம்
அனஸ்தீஸியா என்னும் அன்னப்பறவையை

நமது செயல்திறன் , மொழித்திறன் ஆகிய சிறகுகள் கொண்டு
உயரப்பறக்க செய்து உலகிற்கு உணர்த்துவோம் -அதன் சிறப்பை


எவ்வளவு பெரிய இருட்டையும்
ஒரு சிறிய விளக்கின் வெளிச்சம் கொண்டு போக்கிடுவோம்

எத்தனை தீக்குச்சிகள் போனாலும் பரவாயில்லை
அவ்விளக்கை விடாமுயற்சி கொண்டு ஏற்றிடுவோம் !!





1 comment: